Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இரு மடங்குக்கும் மேல் அதிகரித்தது வேதாந்தா நிகர லாபம்

இரு மடங்குக்கும் மேல் அதிகரித்தது வேதாந்தா நிகர லாபம்

செயல்பாட்டு வருவாய் ரூ.16,736 கோடியிலிருந்து ரூ.26,356 கோடியாக அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வேதாந்தா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், இரண்டாவது காலாண்டில் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்து ரூ.3,650 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.1,798 கோடியாக இருந்தது.

உலோகங்களின் விலை உயர்வு, சாதகமான அந்நியச் செலாவணி நிலவரம் மற்றும் உற்பத்தி அளவு அதிகரிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு உதவியதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல்பாட்டு வருவாய் ரூ.16,736 கோடியிலிருந்து ரூ.26,356 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜிங்க் இந்தியா பிரிவில் சுரங்க உலோக உற்பத்தி 2.71 லட்சம் டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதல் அரையாண்டு சுரங்க உலோக உற்பத்தியிலும் சாதனை எட்டப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட உலோக உற்பத்தியும் முதல் அரையாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஜிங்க் இன்டர்நேஷனல் பிரிவில் காம்ஸ்பெர்க் இரண்டாம் கட்டத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஃபேகார் பிரிவில் குரோம் தாது உற்பத்தியும், காப்பர் இந்தியாவில் காலாண்டு கேத்தோடு உற்பத்தியும் சாதனை அளவை எட்டியுள்ளன.

வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.1,135 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநர் அருண் மிஸ்ரா தெரிவித்தார். உற்பத்தித் திறன் விரிவாக்கம், சுரங்க மேம்பாடு மற்றும் மூலவளப் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. உற்பத்தி வளர்ச்சி, செலவுக் கட்டுப்பாடு மற்றும் பங்குதாரர்களுக்கான மதிப்பை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

வேதாந்தா உலோகங்கள், முக்கியக் கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயல்படுகிறது.

முந்தைய செய்தி
தூத்துக்குடியில் ரூ.38 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளம்
அடுத்த செய்தி
பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே செல்ல தடை

தொடர்புடைய செய்திகள்